Kaateri logo top
www.garudabazaar.com

அட.. தீபிகா படுகோனே தங்கச்சியா இவங்க..? வைரல் ஆகும் ஃபோட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபிகா படுகோனே ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

Deepika Padukone with her sister Anisha Padukone

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. ஹீரோயின் சித்தி இத்னானி கொடுத்த புது அப்டேட்!

தீபிகா படுகோன், 2007 இல் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின்  கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

Deepika Padukone with her sister Anisha Padukone

சமீபத்தில், ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோனே மற்றும் சகோதரி அனிஷா படுகோனே சமீபத்தில் மும்பையில் ஒன்றாக காணப்பட்டனர். சகோதரிகள் இருவரும் கருப்பு நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் காணப்பட்டனர்.

நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் மும்பைக்கு வெளியே புறநகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தனது சகோதரி அனிஷா படுகோனுடன் இரவு உணவை உண்டு மகிழ்ந்தார்.

Deepika Padukone with her sister Anisha Padukone

உணவகத்திற்குள் நுழைந்த தீபிகா, அனிஷா படுகோனை வரவேற்று அணைத்துக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே ஒன்றாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். "நன்றி" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியபடி அவர்கள் உணவகத்திற்குள் செல்வதற்கு முன் தீபிகா அனிஷாவின் தலையில் ஒரு முத்தம் கொடுத்தார். அனிஷாவும் பத்திரிகையாளர்களை நோக்கி கை அசைத்தார்.

கடந்த மாதம், தீபிகா மற்றும் அனிஷா, அவர்களது பெற்றோர்கள் பிரகாஷ் படுகோன் மற்றும் உஜ்ஜலா படுகோன் மற்றும் தீபிகாவின் கணவர் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் அமெரிக்காவில் ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடந்த இந்நிகழ்வின் படங்கள் மற்றும் வீடியோக்களில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகக் காணப்பட்டனர். மேலும் சங்கர் மற்றும் அவரது மனைவி சங்கீதா மகாதேவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Deepika Padukone with her sister Anisha Padukone

2018 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே & ரன்வீர் சிங் கொங்கணி & சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 2012 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம்.. நடிகை சோனம் கபூர் பகிர்ந்த வைரல் இன்ஸ்டாகிராம் PHOTO!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone with her sister Anisha Padukone

People looking for online information on Anisha Padukone, Deepika Padukone, Deepika Padukone with her sister will find this news story useful.