www.garudabazaar.com

”சினேகாவ ஓரமா நின்னு பார்த்த நான், இன்னிக்கு.." – ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினேகாவை வியந்து ஆச்சர்யமாக பார்த்த சிறுவயது ஞாபகத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Aishwarya rajesh fan girl moment with actress sneha

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகிறாரா மொரட்டு சிங்கிள் நடிகர்? செம்ம காம்போ!

கவனம் ஈர்த்த படங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்மையில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் மற்றும் திட்டம் இரண்டு ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன.

Aishwarya rajesh fan girl moment with actress sneha

சீனா வரை சென்ற கனா

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படம் அவருடைய கரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது கனா திரைப்படம்.

இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. Yi Shi Films சார்பில் Mr. AlexiWoo, Ms. SarinaYuanfeiWang  தமிழ் மொழியில், சீன மொழி சப் டைட்டிலுடனும்,  நேரடி சீன மொழியிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர்.  முன்னதாகவே சீனாவில் வெளியாகவேண்டிய  இப்படம் கோவிட் காரணங்களால்  இப்போது வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு சீனாவில் வெளியாகும் தமிழ்ப்படமாக இப்படம் சாதனை படைக்கவுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த படக்குழுவினரை நடிகர் சத்யராஜ் சீன மொழியில் வாழ்த்தியுள்ள வீடியோவும் வைரலானது.

Aishwarya rajesh fan girl moment with actress sneha

ஐஸ்வர்யாவின் fan girl தருணம்

சினேகாவோடு இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் தற்போது நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவரை பற்றி சிறு வயது நினைவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனக்கு சிறுவயதாக இருக்கும்போது ஐதராபாத்தில் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஒன்றை பார்த்தபோது நீண்ட நேரமாக ஒரு ஓரமாக நின்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் அம்மா என்னை ‘போதும் வா’ என அழைத்தார்கள். ஆனால் நான் செல்லாமல் சினேகாவை வியந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது நான் எவ்வளவு வியப்போடு அவரைப் பார்த்தேனோ இப்போது அவருடன் நடிக்கும்போதும் அதே ஆச்சர்யத்தோடு அவரை பார்க்கிறேன்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ப்பா… என்னா ஸ்டைலு!- ரசிகர்களக் கவர்ந்த நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajesh fan girl moment with actress sneha

People looking for online information on Actress sneha, Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ், சினேகா will find this news story useful.