சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகதத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் பார்ட் -2 படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.
லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் வசூல் குவித்ததால் அதன் மூன்றாம் பாகம் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க உள்ளது.
அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கயுள்ளார். ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர்.சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் அரண்மனை 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இப்படம் கூறித்து கூடுதல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது