கேரளா சாங் - நட்பே துணை படத்தில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவ்னி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்து வெளியான படம் 'நட்பே துணை'. இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்தார்.

Kerala Song Released from Hiphop Tamizha and Sundar C's Natpe Thunai

இந்த படத்தில் பாண்டியராஜன், கரு.பழனியப்பன், ஷாரா, ஆர்ஜே விக்னேஷ், எருமசாணி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் கடந்த ஏப்ரல் 4 ஆண் தேதி வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இருந்து சிங்கிள் பசங்க என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கேரளா சாங் என்ற பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா எழுதி அவரே பாடியுள்ளார்.

கேரளா சாங் - நட்பே துணை படத்தில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ வீடியோ