www.garudabazaar.com

விடுதலை, வாடிவாசல் படங்களுக்கு பின் வெற்றிமாறன் இயக்கும் புதிய படம்.. அவரே சொன்ன OFFICIAL அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்.

Vetrimaaran Next Movie after Viduthalai Vaadivaasal

இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் படங்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுகிறது. காக்கா முட்டை, உதயம் NH4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.

Vetrimaaran Next Movie after Viduthalai Vaadivaasal

5 முறை தேசியவிருதை பெற்றிருக்கிறார்.தற்போது இவர் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை மற்றும் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலிசாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. விடுதலை படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை படத்துக்கு பின் முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.

வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போ? என கேள்வி கேட்கப்பட்டது.

Vetrimaaran Next Movie after Viduthalai Vaadivaasal

அதற்கு வெற்றிமாறன், "தற்போது இயக்கும் விடுதலை, வாடிவாசல் படங்களுக்கு பின்னர் உடனடியாக வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் துவங்கும்" என்று அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran Next Movie after Viduthalai Vaadivaasal

People looking for online information on Dhanush, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.