IRAVIN NIZHAL
www.garudabazaar.com

நான்கு மொழிகளில் வெளியாகும் பிசாசு-2.. ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிசாசு-2 படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mysskin Andrea Jeremiah Pisasu 2 Movie Release Date Announced

Also Read | 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் "அரபிக்குத்து" டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே! சும்மா தீ ஆட்டம் இது.

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Mysskin Andrea Jeremiah Pisasu 2 Movie Release Date Announced

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டீசர் தென்னக மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியானது.

Mysskin Andrea Jeremiah Pisasu 2 Movie Release Date Announced

இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு பிசாசி-2 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசாசு-2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் சிவப்பு நிற உடையில் ஆண்ட்ரியா காட்சியளிக்கிறார்.

Also Read | "இந்த நாவலில் ரஜினிகாந்த் நடித்தால்" - வைரமுத்து பகிர்ந்த சுவாரசியமான தகவல்

Mysskin Andrea Jeremiah Pisasu 2 Movie Release Date Announced

People looking for online information on Andrea Jeremiah, Mysskin, Pisasu2, Pisasu2 Movie Updates will find this news story useful.