Yaanai

“அடிக்கிற Ball எல்லாமே சிக்ஸ்…. எப்புடி சார்…” சக்ஸஸ் சீக்ரெட்டை பகிர்ந்த வெற்றிமாறன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறனுக்கு சமீபத்தில் நடந்த Behindwoods Gold Medals நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

Vetrimaaran talked about his success secret in award function

Also Read | மன்னர் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்

BGM விருதுகள்

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Vetrimaaran talked about his success secret in award function

வெற்றிமாறனுக்கு விருது

இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறனுக்கு “Director of the Decade” என்ற விருது அளிக்கப்பட்டது. இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கினார். அப்போது இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பேசிய வீடியோ ஒளிபரப்பானது.

Vetrimaaran talked about his success secret in award function

சக்ஸஸ் சீக்ரெட்

விருது பெற்ற வெற்றிமாறனிடம் “நீங்கள் அடிக்கும் அனைத்து பந்துகளும் சிக்ஸ் ஆகுதே… அது எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்கப்பட்ட போது “என்னுடைய குருநாதர் பாலு மகேந்திரா எப்போதுமே சொல்வார். ஒரு படத்தின் கமர்ஷியல் வெற்றி என்பது ஒரு விபத்து. அது நம்ம கையில இல்ல. நம்மளால என்ன பண்ண முடியுமோ அத பெஸ்ட்டா பண்ணனும். அதே நேரத்தில் நான் ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நான் எடுத்த படங்கள் வணிக ரீதியான வெற்றிபெறக் கூடிய தன்மையில் இலலாத படங்கள். அதை கூடுதல் அன்போடு அவர்கள் ரசித்து பார்த்தார்கள். அதனால் அவர்கள்தான் காரணம். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

Also Read | “வாடிவாசல்-க்காக சூர்யா இந்த Home Work-லாம்…” விருது மேடையில் சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran talked about his success secret in award function

People looking for online information on Award Function, Behindwoods Gold Medal awards 2022, BGM 8, Vetrimaaran, Vetrimaaran talked about his success secret will find this news story useful.