www.garudabazaar.com
iTechUS

பிரபல OTT-யில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு.. ! கலர்ஃபுல் போஸ்டருடன் வெளியான அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

Actress hansika wedding video will be exclusively streamed in Disney Plus HS

Also Read | குழந்தைகளுடன் ரஜினி & லதா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா.. நெகிழ்ச்சியான PHOTOS!

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.

மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்  வைரலாகியது.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிந்தைய Pehli Rasoi சடங்கில் ஹன்சிகா மோத்வானி பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ, பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Love Shaadi Drama என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டரில் கணவருடன் ஹன்சிகா மோத்வானி காரில் இருக்கும் புகைப்படமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோ-வான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஷோ, நடிகை  ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடர போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, வெறும் ஆறு வாரங்களில் இப்படி ஒரு தேவதை திருமணத்தை நேரத்தை வென்று குடும்பமாக சேர்ந்து எப்படி நடத்தினார்கள் என்பது வரை, திருமண திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வரை கூறும் அற்புதமான கதைகள் அடங்கிய ஒரு ஷோ-வாக இருக்கும். அதோடு, ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் ஹன்சிகாவின் திருமணத்தை சுற்றி நடந்த அசௌகரியமான பிரச்சனையை பற்றியும் கூறுகிறார்கள். இது அவரது கனவு நாளை தடம் புரள செய்யும் அளவிற்கு எவ்வாறு அச்சுறுத்தியது என்றும் விளக்குகிறார்கள்.

Also Read | 10 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கும் பிரபல நடிகர்?.. #AK62 படத்தின் சூப்பர் அப்டேட்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது

தொடர்புடைய இணைப்புகள்

Actress hansika wedding video will be exclusively streamed in Disney Plus HS

People looking for online information on Disney Plus HS, Hansika, Hansika Motwani, Hansika wedding video will find this news story useful.