www.garudabazaar.com
iTechUS

"உண்மைய பேசி இவ்ளோ தூரம் வந்துருக்காரு".. விக்ரமன் டைட்டில் வின்னர் ஆகணும்.. ADK Exclusive!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ADK wants vikraman to win bigg boss 6 title exclusive

Also Read | 'மாஸ்டர்' மாளவிகாவின் புதுப்பட போஸ்டர் பாத்துட்டு ரசிகரின் கமெண்ட்..‌ தரமான பதிலடி!!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றி இருந்தனர். இதற்கு மத்தியில், சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளியேறி உள்ளார். அவரது முடிவு பலரையும் அதிர்ந்து போக வைத்திருந்தது.

ADK wants vikraman to win bigg boss 6 title exclusive

இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ADK, Behindwoods நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் தனது பிக் பாஸ் அனுபவம் குறித்தும், விக்ரமன், அசிம் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை ADK பகிர்ந்து கொண்டார்.

அப்படி இருக்கையில், பிக் பாஸ் Finale வில் யார் வெற்றி பெற தகுதி உடையவர் என்பது பற்றிய கேள்வியும் முன் வைக்கப்பட இதற்கு ADK காரணத்துடன் பதிலளித்திருந்தார்.

ADK wants vikraman to win bigg boss 6 title exclusive

விக்ரமன் டைட்டில் ஜெயிப்பார் என பேசிய ADK, இதற்கான காரணத்தை விளக்குகையில், "அவர் எந்த இடத்திலையும் நான் இன்னார், எனக்கு இன்னாரை தெரியும், நான் இந்த கட்சியில் இருந்து வந்திருக்கேன்னு சொன்னது கிடையாது. அவர் அரசியல்வாதிங்குறத பிரதிபலிச்சாரே ஒழிய, நான் இந்த கட்சியை சேர்ந்தவன், எனக்கு இவ்வளவு சப்போர்ட் இருக்குன்னு அவர் சொன்னது கிடையாது. எந்த இடத்திலும் தன்னை புகழ்ந்து பேசினது கிடையாது. எந்த இடத்திலும் யாரையும் தாழ்த்தி பேசினது கிடையாது. அவமரியாதையா பேசுனது கிடையாது, வா, போன்னு சொன்னது கிடையாது.

ADK wants vikraman to win bigg boss 6 title exclusive

அவரோட கோபம் கூட அந்த கோபத்தோட வெளிப்பாடுல சொல்ற பாயிண்ட்ஸ் எல்லாம் மணிமணியா தெரியும். எந்தவிதமான டாஸ்க்லயும் அவர் ஈடுபடலன்னு சொன்னா கூட அவர் ஈடுபட்டு விளையாண்டு இருக்காரு. ஒரு அரசியல்வாதியா இருக்கக்கூடியவர், தன்னை இறக்கி மத்தவங்க கூட விளையாண்டு வெளியே வந்தா எப்படி பிரதிபலிக்கும்ன்னு பார்க்காமல் இந்த வீட்ல அவர் விளையாடி இருக்காரு. சைலன்டா இருந்து உண்மையை பேசி இவ்வளவு தூரம் வந்திருக்காரு. அதனால விக்ரமன் வின் பண்ணனும்ன்றது என்னோட ஆசை. ஆனா யாரு ஜெயிச்சாலும் எனக்கு சந்தோசம் தான்" என ADK கூறினார்.

Also Read | Varisu : "அட நம்ம தளபதியா வண்டி ஓட்டிட்டு வர்றாரு?".. ஷாம் பகிர்ந்த Unseen வீடியோ!!.. வைரல்

"உண்மைய பேசி இவ்ளோ தூரம் வந்துருக்காரு".. விக்ரமன் டைட்டில் வின்னர் ஆகணும்.. ADK EXCLUSIVE!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ADK wants vikraman to win bigg boss 6 title exclusive

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.