‘பட்டதாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதிதி மேனன், கடந்த ஆண்டு ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்த ‘களவானி மாப்பிள்ளை’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

நடிகை அதிதி மேனன், விஜே நிக்கியின் Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்டில் கலந்துக் கொண்டார். அப்போது, விஜே நிக்கி கேட்ட ஓரிரு கேள்விகளுக்கு பதிலளித்த அதிதி, விஜேவை அழ வைத்து ரசித்தார்.
ஆனால் ஒரு கேள்விக்கு பதிலளிக்க தவறியதால், டாஸ்க்கில் சிக்கிய அதிதி, ‘நீங்க என்ன கேட்டாலும் நான் கொடுப்பேன்’ என்றார். பின் விஜேவை Hug செய்து டாஸ்க்கை முடித்தார்.
நடிகை அதிதி மேனன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
KHS கேம்: “நீங்க என்ன டாஸ்க் கேட்டாலும் எனக்கு ஓகே”- விஜேவை குழப்பிய அதிதி மேனன் வீடியோ