80-களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை நிரோஷா தனது காதல், திரை பயணம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘சூரசம்ஹாரம்’, ‘செந்தூரப்பூவே’, ‘பாண்டி நாட்டு தங்கம்’ என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் Behindwoods-ன் செகெண்ட் ஷோ வித் விஜே நிக்கியுடன் கலந்துரையாடிய நடிகை நிரோஷா தனது கடந்த கால திரை வாழ்க்கை, காதல் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், செந்தூரப்பூவே ஷூட்டிங்கில் தனது ஏற்பட்ட விபத்தின் போது காப்பாற்றிய நடிகர் ராம்கி மீது காதல் ஏற்பட்டதாக கூறினார். மேலும், ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஒரே பாடலில் பிரபலமான நிரோஷா, தனது நடிப்பை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டியதுடன், அவர் தன்னுடைய ரசிகர் என்பதையும் கூறிய அழகிய தருணங்களையும் நிரோஷா நினைவு கூர்ந்தார்.
தற்போதுள்ள நடிகர்களில், தனக்கு அஜித் தான் மிகவும் பிடித்த நடிகர், அவர் எது செய்தாலும் அழகா இருக்கு என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் நிரோஷா கூறினார்.
அவர் கிட்ட பிரச்சனையே இது தான்- தல குறித்து பிரபல நடிகை ஓபன் டாக் வீடியோ