காமெடி பேச்சாலும் டைமிங் கவுண்ட்டர்களாலும் யூடியூபில் பிரபலமான ஆர்.ஜே விக்னேஷ்காந்த் தற்போது சினிமாவிலும் களமிறங்கியுள்ளார்.

ஹிப்-ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த ‘தேவ்’, மீண்டும் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘நட்பே துணை’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில், பெரும்பாலும் ஹீரோயின்கள் கலந்துக் கொள்ளும் Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்ட்டில் விஜே நிக்கியுடன் இம்முறை ஆர்ஜே விக்னேஷ் விளையாடினார். இதில் Kiss Me Hug Me Slap Me என்பதற்கு பதில் Bite Me என்ற புதிய விஷயத்தை அறிமுகப்படுத்து, நிக்கியின் கையை கடித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து பல மீம்களுக்கு பதிலளித்த விக்னேஷ், காவிரி ஆற்றில் தெர்மாகோல் விட்ட கதை, ‘மீசைய முறுக்கு’ படத்திற்காக ஆதிக்கு பதில் ஆஸ்கர் வாங்கிய அனுபவம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
பிசியான நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வரும் ஆர்.ஜே விக்னேஷ்காந்த், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்திலும் நடித்துள்ளார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
KHS கேம்: ஒரு ஆம்பளை கிட்ட இப்படி பண்ணலாமா? ஆர்ஜே விக்கி- விஜே நிக்கி அட்ராசிட்டி வீடியோ