நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் நடித்த பலக் லால்வானி, Behindwoods நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். பூனம் பாஜ்வா, எம்ஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பல்லக் லால்வானி என்பவர் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்ட்டில் விஜே நிக்கியுடன் நடிகை பலக் லால்வானி ஜாலியாக விளையாடினார். அப்போது, ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் குறித்த விஜேவின் கேள்விகளுக்கு பதிலளித்த பலக், விஜே நிக்கிக்கு மரணமான குத்து டான்ஸ் டாஸ்க் ஒன்றை டாஸ்க்காக கொடுத்தார்.
வடசென்னை பின்னணியில் தர லோக்கலான ராக்கெட் ராஜா கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
KHS கேம்: ‘குப்பத்து ராஜா’ ஹீரோயினின் வேற லெவல் குத்து டான்ஸ் டாஸ்க் வீடியோ