நடிகை கீர்த்தி பாண்டியன் பங்கேற்ற Behindwoods-ன் KHS கேம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

இயக்குனர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் ‘கனா’ நடிகர் தர்ஷன், பிரபல நடிகர், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், தீனா மற்றும் கலக்கப் போவது யாரு பிரபலங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் தும்பா.
விலங்குகளையும், மனிதர்களையும் மையப்படுத்திய இப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன், விஜே நிக்கியின் Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்டில் கலந்துக் கொண்டார்.
அப்போது, விஜேவின் கேள்விகளுக்கு சரியான விடையளித்து, விஜேவை வித்தியாசமான டாஸ்க்குகளால் திக்குமுக்காடச் செய்தார். முன்னதாக ஒரு ஸ்டெம்பை வைத்துக் கொண்டு சுற்றி வரும் டாஸ்க்கை கொடுத்தார், அதன் முடிவில் நிற்க முடியாமல் நிலை தடுமாறிய விஜே நிக்கி சுருண்டு விழுந்தார்.
அதைத் தொடர்ந்து ஸ்னேக் டான்ஸ், பேக் பெண்ட் வாக் என கீர்த்தி பாண்டியன் குபீர் டாஸ்க்குகளை கொடுத்தார்.
KHS ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து- தல சுத்தி திக்குமுக்காடிய விஜே வீடியோ