"நிறுத்துங்க...என்னை அப்படி சொல்லாதீங்க..!" - நடிகை சுருதி ஹாசன் திடீர் பதிவு... என்ன நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் இருக்கிறது. இந்த நோய் காரணமாக இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் அடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்திய மக்கள் இதுவரை சந்தித்திராத இந்த சூழலில் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் பெரிய பங்கு மீம் கிரேயட்டர்களுக்கு தான்.

கொரோனா வைரஸ் பற்றி நடிகை சுருதி ஹாசன் திடீர் பதிவு Actress Shruti Hassan Gets Irritated On UnRelatable Corona Fun

அப்படி எதோ ஒரு  புண்ணியவான் கிளப்பி விட்டது இன்று இந்த அளவுக்கு வந்து நிற்கிறது. சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான படம் 7-ஆம் அறிவு. இந்தப் படத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் போன்றே காட்சிகள் இருக்கும். அந்த சமயத்தில் ஹீரோயின் ஸ்ருதி ஹாசன் தான் போதிதர்மரை மீண்டும் வர செய்வார்.

உடனே நமது ஆட்கள் ஸ்ருதியை டார்கெட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். "எப்படியாவது போதிதர்மரை அழைத்து வாருங்கள்" என்று ஏகத்துக்கும் மீம்ஸ் போட்டு தள்ளினார்கள். சமீபத்தில் அப்படி பட்ட ஒரு மீமை அவரே பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் அவர் காமெடியாக ஒரு பதிவு இட்டுள்ளார் "மக்கள் தயவு செய்து என்னை போதி தர்மரை அழைத்து வர சொல்லாதீங்க" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor