எனது மகன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. வேற யாராவது..?! - சுஹாசினி மணிரத்னம் என்ன சொல்கிறார்.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது மகன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மணிரத்னமின் மனைவி சுஹாசினி. நடிகையான இவர், நாம் என்கிற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர்களின் மகன் நந்தன். இவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுஹாசினி மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'தமிழக மக்களே, எனது மகன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதே போல வெளிநாட்டில் இருந்து வந்து, கொரோனா வைரஸ் அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரின் தகவல் தெரிந்தவர்கள், உடனே அதை எனக்கு மெசேஜ் செய்து தெரிவியுங்கள், முடிந்தவரை சீக்கிரமாக'' என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நந்தன் அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றாலும், அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால், பாதுகாப்பு நடவடிக்கையாக அவரை தனிமைப்படுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
hello those in Tamil Nadu My son is in self quarantine at home Are u aware of any one who has come from abroad and in self quarantine at home pls inbox me I need details asap
— Suhasini Maniratnam (@hasinimani) March 27, 2020