“சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???” - இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' என தமிழ் சினிமாவில் கருத்தியல் ரீதியான படங்களின் மூலம் புகழ் பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். ஒவ்வொரு முறை அவரது படங்கள் வெளியாகும் போது சமூகத்தில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்துவது வழக்கம்.

Director Pa. Ranjith Questioned about Supreme Court Judgement

இயக்குநர் இயக்குநராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்து வருகிறார். தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக அவர் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ப.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ''ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...  “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”என்று குறிப்பிட்டுள்ளார்.