"என் இனிய இசைஞானியே.." - நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா இளையராஜா சந்திப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 01, 2019 02:32 PM
தமிழ் சினிமாவில் இருபெரும் சாதனை ஜாம்பாவான்களாக கருதப்படுபவர்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அன்னக்கிளி என்ற தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகனார் இளையராஜா. அதுமுதற்கொண்டு அவரது இசைராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது.அப்போது கிராமத்து வாசனை திரைக்கதை அமைப்புடன் கிராமத்துக்கே சென்று ஷீட்டிங் நடத்தி ’பதினாறு வயதினிலே’ என்ற படத்தை எடுத்தார் பாரதிராஜா.அப்படத்திற்கு பாரதிராஜா இசையமைத்து எல்லா பாடல்களையும் வெற்றி பெற வைத்தார்.
இருவரது கூட்டணில் உருவான படங்களில் இடம்பெற்ற இசை மற்றும் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத காவியம். இந்நிலையில் இருபெரும் ஜாம்பாவான்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இயலும்,இசையும், இணைந்தது ..
இதயம் என் இதயத்தை தொட்டது💕💕💕என் தேனியில்❣❣ pic.twitter.com/4Tj9SXVQ2L
— Bharathiraja (@offBharathiraja) November 1, 2019