ENPT ஸ்டார் நடிக்கும் அடுத்தப்படத்தின் ஷூட்டிங் பிளான் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 06, 2019 06:08 PM
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் நடித்து வரும் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ‘சீமராஜா’ என வரிசையாக சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் தற்போது சசிக்குமாரை ஹீரோவாக வைத்து ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக டிக்டாக் பிரபலம் மிர்ணாளினி ரவி நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
வினோத் ரத்திரனசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோனி தாசன் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக 12 நாட்கள் தேனி மாவட்டத்தில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சசிக்குமார் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன், தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வரும் நவ.29ம் தேதி ரிலீசாகவுள்ளது. மேலும், சரத்குமாருடன் சசிக்குமார் இணைந்து நடித்து வரும் ‘நாநா’ திரைப்படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.