''என்னை பற்றிய கிசுகிசுக்களை படிக்கும் போது..'' - ப்ரியா பவானி ஷங்கரின் ஜாலி க்ளிக்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர். இதையடுத்து இவர் மேயாதமான் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கோலிவுட்டில் தற்போது இவர் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார். செல்ஃபோனை பார்த்து, சிரித்தபடி அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவுடன், ''என்னை பற்றிய கிசுகிசுக்களை படிக்கும் போது இப்படிதான் இருக்கும்'' என க்யூட்டாக பதிவிட்டுள்ளார். ப்ரியா பவானி ஷங்கரின் இந்த பதிவு நெட்டிசன்களை கவர்ந்து லைக்ஸை குவித்து வருகிறது.
Tags : Priya Bhavani Shankar