டெங்கு காய்ச்சலால் பிரபல குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா பலி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 19, 2019 06:06 PM
தெலுங்கு சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக அறியப்படுபவர் கோகுல் சாய் கிருஷ்ணா. பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா போல் இவர் பேசி நடித்து வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.
![Child Actor Gokul Sai Krishna Died Due to Dengue fever Child Actor Gokul Sai Krishna Died Due to Dengue fever](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/child-actor-gokula-krishna-died-due-to-dengue-fever-photos-pictures-stills.png)
மேலும் இவர் ஜீ தெலுங்கு சேனலில் ஒளிபரப்பான டிராமா ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி இவர் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் பாலகிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனது ரசிகர்களை விட எனக்கு மதிப்பு மிக்கது எதுவுமில்லை. எனது ரசிகர்களில் ஒருவரான கோகுலின் திடீர் மரணம் என் மனதை பெரிதும் பாதித்துள்ளது. என்னை அவர் பேசும் வசனங்களால் பெரிதும் கவர்ந்துள்ளான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.