www.garudabazaar.com

பிரபல தமிழ் சீரியலில் 90S ஹீரோயின் கௌசல்யா..! மாஸ் எண்ட்ரி .. வைரலாகும் ப்ரோமோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல முக்கிய சீரியல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை நெருங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

actress kausalya entry in popular sun tv serial

Also Read | “ரச்சிதா க்ரஷ்.. நான் என் girl friend-அ Love பண்றேன்.. பேச ஆரம்பிச்சிட்டேன்” .. ராபர்ட் EXCLUSIVE

இந்த சீரியலில்தான் நடிகை கௌசல்யா அதிரடியாக மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். கிராமத்தில் இருந்து கலெக்டராக வேண்டும் என்கிற கனவுடன் வந்த சுந்தரி கார்த்திகை திருமணம் செய்தாலும், கார்த்திக் சுந்தரியை ஏமாற்றிவிட்டு அனுவுடன் வாழ்கிறார். ஒரு கட்டத்தில் இது சுந்தரிக்கு தெரிய வர சுந்தரியின் வாழ்க்கை போராட்டம் தொடர்கிறது.

இதில் அடுத்த கட்டமாக சுந்தரி கலெக்டராக நினைக்கிறார். இதற்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி அதிகாரியாக கௌசல்யா இந்த சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இனி இந்த சீரியலில் விறுவிறுப்பாக நடக்க போகும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். கௌசல்யாவின் வருகை சீரியலின் கதைக்கும், திரைக்கதைக்கும் எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண போகிறது என்பதையும் ரசிகர்கள் காண ஆவலாக உள்ளனர்.

actress kausalya entry in popular sun tv serial

நடிகை கௌசல்யா 90களில் தமிழில் பிரபலமாக அறியப்பட்ட மலையாள நடிகை. தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க, காதலே நிம்மதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் மூலம் பிரபலமான கௌசல்யா முரளி, கார்த்திக், பிரபுதேவா, பார்த்திபன், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

actress kausalya entry in popular sun tv serial

அதன் பிறகு தமிழ் முதல் தெலுங்கு திரைப்படங்கள் வரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கௌசல்யா முதன்மை கதாபாத்திரங்களின் அக்கா, அண்ணி என பல கேரக்டர்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிறகு தமிழ் சீரியல்களிலும் நடித்த கௌசல்யா, சில நாட்கள் தோன்றாமல் இருந்தார். தற்பொழுது மீண்டும் சுந்தரி சீரியலில் தோன்றியிருக்கிறார்.

Also Read | Dharavi Bank: வெப் சீரிஸ்க்காக தென்னிந்திய முன்னணி ஹீரோ படத்தை பார்த்த விவேக் ஓபராய்.!

பிரபல தமிழ் சீரியலில் 90S ஹீரோயின் கௌசல்யா..! மாஸ் எண்ட்ரி .. வைரலாகும் ப்ரோமோ.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

actress kausalya entry in popular sun tv serial

People looking for online information on Actress, Kausalya, Sundari, Sundari Serial will find this news story useful.