www.garudabazaar.com

Wonder Women: நிறைமாத கர்ப்பிணியாக ஃபோட்டோ போட்ட நித்யா மேனன்.. இதான் விஷயமா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.

Actress Nithya Menen Latest Instagram Post about Wonder Women

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.

180 படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவர், வெப்பம், மாலினி 22 பாளயங்கோட்டை, ஜெகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். லிவ்-இன் வாழ்க்கையை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ இவருக்கும் பெரிய கவனத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நடிப்பில் வெளியான சைக்கோ, மெர்சல், காஞ்சனா -2 பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

Actress Nithya Menen Latest Instagram Post about Wonder Women

இந்த வருடம் தெலுங்கு மொழியில் பீம்லா நாயக்,  தமிழில் திருச்சிற்றம்பலம், மலையாள மொழியில் 19 (1) (a) ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருக்கும் நித்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Nithya Menen Latest Instagram Post about Wonder Women

நித்யா மேனனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்-களை அள்ளி வருகிறது. Wonder Woman படத்தில் நோரா கதாபாத்திரத்தின் BTS போட்டோவை பகிர்ந்து, நோரா கதாபாத்திரத்திரம் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என பதிவிட்டுள்ளார். மேலும்  தான் கர்ப்பமாக இல்லை என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Actress Nithya Menen Latest Instagram Post about Wonder Women

அஞ்சலி மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வொண்டர் வுமன் சோனிலிவ் தளத்தில் நேரடியாக டிஜிட்டல் பிரீமியர் முறையில் நவ.18 முதல் ஒளிபரப்பாக உள்ளது, ரோனி ஸ்க்ரூவாலா & ஆஷி துவா சாரா இப்படத்தை தயாரித்துள்ளனர். நடிகைகள் நதியா, நித்யா மேனன், பார்வதி திருவொத்து, பத்மப்ரியா உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Nithya Menen Latest Instagram Post about Wonder Women

People looking for online information on Nithya Menen, Wonder Women will find this news story useful.