‘என் கையில் குழந்தையை கொடுத்தப்போ’.. நெகிழ்ச்சி ஃபோட்டோவுடன் தீபக் & அபிநவ்யாவின் வைரல் Post.!
முகப்பு > சினிமா செய்திகள்என்றென்றும் புன்னகை, ஈரமான ரோஜாவே, மதுர சிஸ்டர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகர் தீபக். இவர் கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.
![actress abinavya gives birth to boy baby vj deepak post actress abinavya gives birth to boy baby vj deepak post](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actress-abinavya-gives-birth-to-boy-baby-vj-deepak-post-photos-pictures-stills.jpeg)
Also Read | "கல்யாணம் ஆன மைனாவுக்கு பிராக்கெட் போடுறியா?".. கேட்டதும் க்யூட்டாக பதில் சொன்ன ஷிவின் 😍 Bigg Boss 6
இதேபோல் அபிநவ்யா அவர்கள் சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே இவர்கள் இருவரும் ஒரு வருடத்துக்கும் மேலாக காதலித்து வந்ததை அடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
பின்னர் இவர்களின் திருமணமும் சென்னையில் நடைபெற்றது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் அந்த நேரத்தில் சோசியல் மீடியாவில் வைராலகின. தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் சீசனில் நடித்து வருகிறார். திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி ஆகியோர் நடிக்கும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் தீபக் நடித்துவருகிறார்.
அதன் பின்னர்தான், நடிகர்கள் தீபக் - அபி நவ்யா இருவரும் தங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்தனர். இதை கேட்டதும் சீரியல் பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே அபிநவ்யாவுக்கு 9 வது மாதத்தில் நடக்கும் சீமந்த விழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் அபி நவ்யாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை தீபக் & அபிநவ்யா இருவரும் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் இந்த தம்பதியினர் தங்களது முதல் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். இதுகுறித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநவ்யா மற்றும் தீபக் பகிர்ந்த போஸ்டில், “எங்கள் மீது கடவுளின் கருணை பொழிந்தது. இதன் விளைவாக விலைமதிப்பற்ற பரிசை உணர்ந்திருக்கிறோம். எங்கள் குழந்தையை நர்ஸ் என் கைகளில் வைத்தபோது, உயிர்ப்புடனும் உற்சாகத்துடனும் உணர்ந்தோம்” என குறிப்பிட்டுள்ளனர். இவர்களுக்கு கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி உட்பட பலரும் வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | “கடவுள் அருளால் கிடைத்த பரிசுகள்”.. இரட்டை குழந்தைகளுக்கு கடவுள் பெயர் சூட்டிய நமீதா..!