www.garudabazaar.com

90S ஃபேவரைட் ஹீரோயின் ரோஜா மகன் நல்லா வளந்துட்டாரே..!!.. வைரலாகும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.

Actress RK Roja Shared Her Son Photo on Instagram

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Actress RK Roja Shared Her Son Photo on Instagram

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மல்லிகா என்ற ஒரு மகள் மற்றும் கிருஷ்ண கௌசிக் என்ற ஒரு மகன் உள்ளனர்.

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

Actress RK Roja Shared Her Son Photo on Instagram

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் புகைப்படங்களை ரோஜா பகிர்ந்துள்ளார். மகனுக்கு உணவூட்டும் புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன. "எனது நாளின் மகிழ்ச்சியான தருணம் என்பது உன்னுடன் விளையாடுவது" என ரோஜா பதிவிட்டுள்ளார். 16 வயதாகும் ரோஜாவின் மகன் கிருஷ்ண கௌசிக் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress RK Roja Shared Her Son Photo on Instagram

People looking for online information on RK Roja, Rk selvamani, Roja will find this news story useful.