www.garudabazaar.com

Kangana Ranaut : மாஃபியாக்களின் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட மாட்டேன் - கங்கனா ரனாவத் பரபரப்பு ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தலைவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

Kangana Ranaut claims she was forced by Bollywood mafia

தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பிலான சந்திரமுகி 2 படத்தில் நடிகை கங்கனா ரனாவத், சந்திரமுகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தல் கங்கனா ரனாவத், பாலிவுட் திரையுலகம் குறித்தும் பேசியிருக்கிறார்.

அதில், “நான் ஒரு அரசியல்வாதி, அதிகாரி மற்றும் தொழிலதிபர் குடும்பத்திலிருந்து வந்தவள். எனது இந்த மனப்பான்மை எங்கிருந்து வந்தது என்பதை மாஃபியாக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் நான் ஏன் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடுவதில்லை என்பதையும் சினிமா மாஃபியாக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்று தெரிவித்தவர், “பணத்துக்காக திருமணங்களில் நடனமாடும் மாஃபியாக்களின் உண்மையான குணநலம் பற்றி தெரியாது!” என்றும் அதனால் தான் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் அந்த திரைப்பட மாஃபியாக்கள் தன்னுடைய இந்த முடிவுகளால் தன்னை ஆணவம் பிடித்தவள் என்று குறிப்பிடுவதாகவும், ஆனால் இது ஆணவமா? நேர்மையா? என்று சொல்லுங்கள் என்றும் ரசிகர்களை நோக்கி பரபரப்பான ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut claims she was forced by Bollywood mafia

People looking for online information on Kangana Ranaut, Kangana Ranaut on Mafia will find this news story useful.