www.garudabazaar.com

ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. நாதஸ்வரம் தவில் இசைக்க.. அவரே வெளியிட்ட வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் ரவீந்தர் & அவரது மனைவி மகாலட்சுமி தங்களது வீட்டில் விஷேசம் நடத்தி உள்ளனர்.

Ravinder Mahalakshmi Chandi Homam Home Function Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல கிரிக்கெட் வீரர் மகள் தான் நடிகை ராதிகா பேத்தியா..! வைரலாகும் CUTE புகைப்படங்கள்!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் கடந்தாண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

Ravinder Mahalakshmi Chandi Homam Home Function Video

Images are subject to © copyright to their respective owners.

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார். தற்போது காதல் கண்டிசன் அப்ளே என்ற படத்தையும் வினியோகம் செய்துள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வந்தார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

Ravinder Mahalakshmi Chandi Homam Home Function Video

Images are subject to © copyright to their respective owners.

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். சமீபத்தில் தனது மனைவியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தமது வீட்டில் ரவீந்தர் & மகாலட்சுமி, சண்டி ஹோமம் (யாகம்) நடத்தி உள்ளனர். நாதஸ்வரம் தவில் இசைக்க, வேத மந்திரங்கள் ஓதி  பிராமணர்கள் குழு இந்த யாகத்தை நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோவை ரவீந்தர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Ravinder Mahalakshmi Chandi Homam Home Function Video

Images are subject to © copyright to their respective owners.

சண்டி ஹோமம், எதிரிகளை வீழ்தத, சாபங்களை போக்க துர்க்கை அம்மனுக்கு நடத்தப்படும் சிறப்பு ஹோமம் ஆகும்.

Also Read | "சகோதரர் ராஜமௌலி".. ஆஸ்கார் விருது பெற்ற RRR பட பாடல் குறித்து சீமான் ட்வீட்!

Ravinder Mahalakshmi Chandi Homam Home Function Video

People looking for online information on Chandi Homam Home Function, Ravinder, Ravinder Mahalakshmi will find this news story useful.