www.garudabazaar.com

"சகோதரர் ராஜமௌலி".. ஆஸ்கார் விருது பெற்ற RRR பட பாடல் குறித்து சீமான் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

Images are subject to © copyright to their respective owners.

Also Read | MISSION IMPOSSIBLE படத்தின் ஏழாவது பாகம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான ஃபைட் சீன் போஸ்டர்! மிரட்டுதே

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

Images are subject to © copyright to their respective owners.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

Images are subject to © copyright to their respective owners.

கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் சிறந்த பாடல்   பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.

ஆஸ்கார் விருது விழா இந்திய நேரப்படி  கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர்,  நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர்.

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

Images are subject to © copyright to their respective owners.

இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இந்த பாடலை ஆஸ்கார் விருது விழாவில் நடிகை தீபிகா படுகோனே அறிமுகம் செய்து வைத்தார்.

இசையமைப்பாளர் கீரவாணி & பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதை பெற்றுக் கொண்டனர். விருது பெற்ற கலைஞர்களையும் படக்குழுவினரையும் வாழ்த்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் செய்துள்ளார். அதில், "நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

Images are subject to © copyright to their respective owners.

கீரவாணிக்கும் ராஜமௌலிக்கும் RRR அணியினருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்."சகோதரர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான, #RRR படத்தில் இடம்பெற்ற, #நாட்டுக்கூத்து எனும் பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கப் பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். RRR படத்தின் இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, நடன இயக்குநர் பிரேம் ரக்க்ஷித், பாடலில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்". என சீமான் ட்வீட் செய்துள்ளார்.

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

Images are subject to © copyright to their respective owners.

மேலும், ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whisperer ஆவணப்படம் குறித்து சீமான் தமது ட்வீட்டில், " அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 95வது #Oscars விருது விழாவில், தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட  The Elephant Whisperer எனும் ஆவணப்படத்திற்கு விருது கிடைக்கப்பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. முதுமலையில் யானைக்கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளைப் பராமரித்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களான பொம்மன் - பெல்லி தம்பதியையும், அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை உருவாக்கிய ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்கா உள்ளிட்ட குழுவினருக்கு எனது அன்புநிறைந்த வாழ்த்துகள்" என சீமான் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | பிரபல கிரிக்கெட் வீரர் மகள் தான் நடிகை ராதிகா பேத்தியா..! வைரலாகும் CUTE புகைப்படங்கள்!

NTK Seeman Tweet about RRR Naatu Naatu Oscar Award Win

People looking for online information on NTK Seeman, NTK Seeman Tweet, RRR Naatu Naatu Oscar Award, The Elephant Whisperer will find this news story useful.