www.garudabazaar.com

இனியா நடிக்கும் ‘காஃபி’ த்ரில்லர் படம்.. நவ 27-ல் பிரபல டிவி சேனலில் நேரடி ரிலீஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது சகோதரனைத் தேடும் ஒரு வலிமையான பெண்ணின் பயணத்தை சித்தரிக்கும் நடிகை இனியாவின் நடிப்பில் உருவான காஃபி திரைப்படம் இந்த  ஞாயிறு, நவம்பர் 27, மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.

Actress Iniya Starring Coffee Direct TV release

Also Read | அட.. ஸ்கூல்லயே பெரிய ரஜினி Fan-ஆ சசிகுமார்..? ‘அண்ணாமலை’ படம் பார்த்த சுவாரஸ்ய பின்னணி..!

சென்னை, 22 நவம்பர் 2022:  நடிகை இனியாவின் நடிப்பில் உருவான காஃபி திரைப்படத்தை, Viacom18 இன் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ் , இந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 27ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பவிருக்கிறது.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்து, ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை சித்தரிக்கும் இந்த திரில்லரைக் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மேலும் நிஜ வாழ்க்கை ஜோடியான ராகுல் தேவ் மற்றும் முகதா முதல் முறையாக  தமிழ் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

Actress Iniya Starring Coffee Direct TV release

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் ஒரு போலீஸ் ஆக ஆசைப்படுகிறார் சத்யா (நடிகை இனியா). இருப்பினும், சூழ்நிலைகள் அவளை ஒரு வாகன ஓட்டுநராக மாற்றி விடுகின்றன. இந்தத் தொழிலின் மூலம், அவள் தன் ஒரே சொந்தமான அவளுடைய சகோதரன் கார்த்திக்கிற்காக வேலை செய்கிறாள். ஒரு நாள் கார்த்திக்கிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. ஆனால் அவனது மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே, அவன் நினைத்தற்கு மாற்றாக மனித கடத்தல் கும்பலிடம் சிக்கி கடத்தப்படுகிறான்.  சத்யா விரைவில் தனது சகோதரனின் இருப்பிடத்தைக் கண்டறிய  தனது தேடலை தொடங்குகிறாள் மற்றும் குற்றத்தின் இருண்ட உலகிற்கு செல்கிறாள். சத்யா தன் சகோதரனைக் காப்பாற்ற முடியுமா மற்றும் படத்தின் வில்லன் விக்ரமுடன் (நடிகர் ராகுல் தேவ்)  சண்டையிட்டு  தோற்கடிப்பாளா.. என்பதே மீதிக்கதை.

Actress Iniya Starring Coffee Direct TV release

இப்படம் குறித்து நடிகை இனியா கூறுகையில், "இது ஒரு அற்புதமான அனுபவம், குறிப்பாக ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் அவர்களிடமிருந்து நிறைய  கற்றுக்கொள்ளும் அனுபவம்  எனக்கு கிடைத்தது. சத்யா போன்ற ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பது மிகவும் சவாலாகவும் இருந்தது. சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் உள்ளன, ஆனால் காஃபி திரைப்பரம் பார்வையாளர்களுக்கு இன்னும் ஒருபடி அனுபவத்தை உயர்த்துவது உறுதி. ” என தெரிவித்துள்ளார்.

Also Read | பேட்டி நடுவே VIDEO CALL.. பிக்பாஸ் GP முத்துவிடம் நடிகர் சசிகுமார் வெச்ச கோரிக்கை..! Exclusive

Tags : Iniya, Coffee

தொடர்புடைய இணைப்புகள்

Actress Iniya Starring Coffee Direct TV release

People looking for online information on Coffee, Iniya will find this news story useful.