www.garudabazaar.com

Hansika : திருமணமத்துக்கு பிறகு ஹன்சிகா பகிர்ந்த வைரல் Post.. trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Hansika motwani shares her marriage picture in insta

Also Read | “துணிவு-ல வில்லனா நடிச்சிருக்க வேண்டியது”.. ‘வாரிசு’-ல் இணைந்த ஷ்யாம் EXCLUSIVE

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

Hansika motwani shares her marriage picture in insta

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்ய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோரின் திருமணம், ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றுள்ளது.

Hansika motwani shares her marriage picture in insta

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Hansika motwani shares her marriage picture in insta

இந்த நிலையில், திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹன்சிகா மோத்வானி பகிர்ந்துள்ளார். திருமண உடையில், தனது கனவர் சோஹெலுடன் மேடையில் இருக்கும் புகைப்படங்களை ஹன்சிகா தற்போது பகிர்ந்துள்ள நிலையில், "Now&forever ❤️" என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | Bharathi Kannamma : அந்த DNA RESULT-அ நம்பாத... குட்டையை குழப்பிய வெண்பா .. மறுபடியும் மொதல்ல இருந்தா...

தொடர்புடைய இணைப்புகள்

Hansika motwani shares her marriage picture in insta

People looking for online information on Hansika, Hansika Motwani, Hansika Motwani Sohael Khaturiya wedding, Hansika Motwani Wedding, Hansika motwani wedding pictures, Sohael Khaturiya will find this news story useful.