www.garudabazaar.com

VINTAGE காரில் கணவருடன் போட்டோஷூட்.. ஹன்சிகா வெளியிட்ட கலர்ஃபுல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.

மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்ய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோரின் திருமணம், ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றது.

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்  வைரலாகியது.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிந்தைய Pehli Rasoi சடங்கில் ஹன்சிகா மோத்வானி பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் இருக்கும் வண்ணமயமான Pre Wedding போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இருவரும் பழமையான காரில் திருமண கோலத்தில் காட்சியளித்தனர்.

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

மேலும் ஹன்சிகா & சோஹேல் நண்பர்கள் குழுவும் இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஃபோட்டோ ஷூட்டை கப் கேக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Hansika Motwani Photo Shoot with Her Husband

People looking for online information on Hansika Motwani, Hansika Motwani Wedding, Hansika Photoshoot will find this news story useful.