www.garudabazaar.com

கோலாகலமாக நடக்கும் ஹன்சிகாவின் Pre Wedding விழா.. வருங்கால கணவர் பகிர்ந்த கலர்ஃபுல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

Actress Hansika Motwani Pre Wedding Function Video

2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர்.

பின்னர் நடிகர்கள் விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

Actress Hansika Motwani Pre Wedding Function Video

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை இன்று டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

Actress Hansika Motwani Pre Wedding Function Video

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது வருங்கால கணவருடன் சேர்ந்து திருமணத்திற்கு முந்தைய சடங்குகளுக்கு வருகை தரும் வண்ணமயமான வீடியோவை சோஹேல் கதூரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு முந்தைய வைபவங்களில் ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவருடன் இணைந்து செல்லும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

Actress Hansika Motwani Pre Wedding Function Video

People looking for online information on ஹன்சிகா மோத்வானி, Hansika Mothwani, Hansika Motwani Wedding, Hansika Wedding will find this news story useful.