அவெஞ்சர்ஸ் சீரிஸில் இறுதியாக வெளியான படம் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'. மார்வெலின் இந்த படம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வசூல் சாதனை புரிந்துவருகிறது.

இந்த படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. முதல் இடத்தில் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' திரைப்படம் உள்ளதாக கூறப்படுகிறது.
'டைட்டானிக்', 'அவதார்' உள்ளிட்ட மாபெரும் வெற்றி படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு ஐஸ்பெர்க் உண்மையான டைட்டானிக்கை மூழ்கடித்தது. தற்போது அவெஞ்சர்ஸ் திரைப்படம் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துள்ளது.
எல்லோருமே உங்களது சிறப்பான பணிகளுக்கு வணக்கம் தெரிவிப்பார்கள். திரைத்துறைக்கு மிகப்பெரிய வெற்றியை காட்டிவிட்டீர்கள். இது அனைத்தையும் விட பெரியது' என்று தெரிவித்துள்ளார்.