டிக்-டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூக பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது’ என்று நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
தற்போது டிக் டாக் செயலி மீதான் தடை நீக்கப்பட்டதையடுத்து, டிக் டாக் பிரியர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். பிரபல காமெடி நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் அப்படி ஒரு வித்தியாசமான டிக் டாக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் நடித்த ‘சாமி’ திரைப்படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியை வீட்டில் உள்ள வளர்ப்பு நாயுடன் சேர்த்து இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்த வீடியோவை நடிகர் விவேக் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், ‘அட பாவிகளா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லையே இல்லையா?’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?!?!😂 pic.twitter.com/tNNaKWdLI5
— Vivekh actor (@Actor_Vivek) May 12, 2019