'பியார் பிரேமா காதல்' படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்க, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, கவிண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு பவண் ஸ்ரீகுமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார். இந்த படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஏய் கடவுளே என்ற பாடல் வெளியாகியுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி எழுதியுள்ள இந்த பாடலை, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் இணைந்து பாடியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹரிஷ் கல்யாண், ஒரு குத்தோட ஆரம்பிப்போமா இந்த நாள ? என்று குறிப்பிட்டுள்ளார். ஹரிஷ் கல்யாணின் இந்த ட்விட்டுக்கு பதிலளித்த நடிகர் விவேக், நைஸ் குத்து என பின்னூட்டமிட்டுள்ளார்.
ஒரு குத்தோட ஆரம்பிப்போமா இந்த நாள ? - ஹீரோவுக்கு பிரபல காமெடியன் பதிலடி! வீடியோ