பிரபல தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்  பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  B.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1  மணியளவில் இயற்கை எய்தினார். B.வெங்கட்ராம ரெட்டி(75), தனது மனைவி  B.பாரதிரெட்டி, மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி மற்றும் அர்ச்சனா ரெட்டி ஆகியோருடன் வசித்து வந்தார்.

Producer B.Venkatrama Reddy passes away

இவர்  தாமிரபரணி , படிக்காதவன், வேங்கை , வீரம் , பைரவா ஆகிய 5   படங்களை  தயாரித்துள்ளார் . தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சங்கதமிழன்’ படத்தினை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பக நடைபெற்று வருகிறது.

மறைந்த  B.வெங்கட்ராம ரெட்டியின் இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்  B.வெங்கட்ராம ரெட்டியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.