www.garudabazaar.com

மிர்ச்சி சிவா-மேகா ஆகாஷின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’.. செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 01, மார்ச் 2022: மிர்ச்சி சிவா நடிப்பிலான சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்றது.

Mirchi Shiva Megha Akash Single Shankarum smartphone Simranum

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்

சென்னை-28, தமிழ்ப்படம் பார்ட்-1, பார்ட்-2 ஆகிய படங்களின் மூலம் காமெடி ரசிகர்களை அள்ளியவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பிலான  சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்படத்தில் மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குறியன் நடிக்கின்றனர்.

Mirchi Shiva Megha Akash Single Shankarum smartphone Simranum

புதிய அப்டேட்

இயக்குநர் விக்னேஷ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் சிங்கிள், டீசர், டிரைலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mirchi Shiva Megha Akash Single Shankarum smartphone Simranum

இதர திரைப்படங்கள்

இதனிடையே ‘தில்லுக்கு துட்டு’ இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில், ‘இடியட்’, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்திலான ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தான் நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான ‘நாய் சேகர்’ திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் நாய்க்கு வேறலெவலில் காமெடியாக வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒரே பங்கமா போச்சே.. வெண்பா, பாரதிக்கு தங்கச்சியா? .. கண்ணம்மாவின் சிறப்பான செய்கை

Mirchi Shiva Megha Akash Single Shankarum smartphone Simranum

People looking for online information on Megha Akash, Mirchi Shiva, Single Shankarum Smartphone Simranum will find this news story useful.