www.garudabazaar.com

”என்ன ப்ரோ all okay”… சதீஷ் படத்தின் போஸ்டருக்கு மிர்ச்சி சிவாவின் செம்ம ரியாக்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சதீஷின் சட்டம் என் கையில் படத்தின் வித்தியாசமான போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மிர்ச்சி சிவா.

Mirchi shiva reaction to sathish new movie poster

”இனிமே நீங்க சாப்பிட கூப்டா, நான் …. ” விஜய்க்கு நெல்சன் ஜாலி பதில்!

சட்டம் என் கையில்…

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சதீஷ். நடிகர் வசனகர்த்தா கிரேஸி மோகனின் நாடகக் குழுவில் இருந்து வந்த அவர் ஏ எல் விஜய்யின் பொய் சொல்லப்போறோம், மதராசப்பட்டணம் மற்றும் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் நடித்த அவர் கதாநாயகனாக நடித்த நாய் சேகர் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது OMG என்ற படத்தில் சன்னி லியோனுயடன் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படமான ‘சட்டம் என் கையில்’ படத்தின் போஸ்டரை சிம்பு வெளியிட்டுள்ளார். சட்டம் என் கையில் என்ற பெயரில் கமல் நடிப்பில் 1978 ஆம் ஆண்டு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Mirchi shiva reaction to sathish new movie poster

ஒரு இரவில் நடக்கும் திரில்லர்

சதீஷ் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்கள் எல்லாம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களாக அமைந்தன. ஆனால் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் திரில்லர் கதையாக உருவாவதாக படத்தின் இயக்குனர் சாச்சி கூறியுள்ளார். மேலும் அவர் “பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.” எனக் கூறியிருக்கிறார்.

Mirchi shiva reaction to sathish new movie poster

போஸ்டருக்கு மிர்ச்சி சிவாவின் ரியாக்ஷன்…

இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் சதீஷ் முகம் முழுவதும் ரத்தம் சொட்ட மிரட்டலான தோற்றத்தில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மிர்ச்சி சிவா "என்ன ப்ரோ all okay” என ஜாலியாகக் கேட்டுள்ளார். சதீஷின் முகத்தில் ரத்தம் வழிவதை அடுத்து ஏதேனும் அடிபட்டி விட்டதா என்பது போல ஜாலியாக அவர் அந்த டிவீட்டைப் பகிர்ந்துள்ளார். சிவாவும் சதீஷும் தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் இருவரின் கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

”ஷூட்டிங்குக்கு ரெண்டு நாள் முன்னாடி… என்ன பழிவாங்கன்னே”… மாளவிகா மோகனின் செம்ம status!

தொடர்புடைய இணைப்புகள்

Mirchi shiva reaction to sathish new movie poster

People looking for online information on சதீஷ், மிர்ச்சி சிவா, Mirchi Shiva, Sathish, Sathish new movie poster will find this news story useful.