www.garudabazaar.com

விவேக் & மிர்ச்சி சிவாவின் புதிய காமெடி ரியாலிட்டி சீரிஸ்! அமேசான் ப்ரைமில்.. அசத்தலான Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமேசான் ப்ரைம் வீடியோவில் அசத்தலான புதிய காமெடி ரியாலிட்டி சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

vivkeh mirchi shiva hosting Amazon Prime comedy reality series

அமேசான் ப்ரைம் சேனலில் மிர்ச்சி சிவா மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ சின்னக் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கிய LOL: எங்க சிரி பாப்போம் எனும் காமெடி ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்நிகழ்ச்சியில் நாம் பார்த்து பழகிய, நம்மை சிரிக்க வைத்த பிரபல காமெடி முன்னணி பிரபலங்கள் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் போட்டி. 6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை  16 வயதுக்கு மேற்பட்டோர் கண்டுகளிக்க முடியும்.

vivkeh mirchi shiva hosting Amazon Prime comedy reality series

மாய எஸ் கிருஷ்ணன், அபிஷேக் குமார், பிரேம்ஜி அமரன், ஆர்த்தி கணேஷ், ஆர்.ஜே.விக்னேஷ், சதிஷ், புகழ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், பார்கவ் ராமகிருஷ்ணன், ஷாமா ஹரினி உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ப்ரைமில் ஒளிபரப்பாகிறது.

முன்னதாக அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழில் வெளியான காமிக்ஸ்டான் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ ஹிட் அடித்தது. அதில் பங்கேற்றவர்கள் தான் அபிஷேக் குமார் மற்றும் ஷாமா ஹரினி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிம்புவின் தாயாருக்கு குவியும் பாராட்டுகள்.. தாய்மை உள்ளத்துடன் செய்த நெகிழ்ச்சி காரியம்! 

vivkeh mirchi shiva hosting Amazon Prime comedy reality series

People looking for online information on Amazon Prime Video, Power star Srinivasan, Pugazh, Sathish, Shiva, Vivekh will find this news story useful.