www.garudabazaar.com

"எக்ஸாம் நெனச்சாலே பயமா இருக்கு".. மாணவர்களுக்கு ஷாருக் கான் கொடுத்த கோல்டன் அட்வைஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பொது தேர்வை எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Actor Sharukh Khan Advice to school students for Board Exam

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மீண்டும் இணைந்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஷாருக் கான். கடந்த சில வருடங்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த ஷாருக் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.

Actor Sharukh Khan Advice to school students for Board Exam

Images are subject to © copyright to their respective owners.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகியது. வருடக்கணக்கில் காத்திருந்த ஷாருக் ரசிகர்களுக்கு இந்த படம் பட்டாசான ட்ரீட்டாகவே அமைந்துள்ளது. படம் வெளியாகி உலக அளவில் 1000 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Actor Sharukh Khan Advice to school students for Board Exam

Images are subject to © copyright to their respective owners.

அவ்வப்போது #askSRK எனும் ஹேஷ்டாக் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரகர்களிடம் பல்வேறு கருத்துக்களை ஷாருக் கான் பகிர்ந்துகொண்டார். அப்போது, ரசிகர் ஒருவர்," இன்னும் சில வாரங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை எழுத இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் ஊக்கமூட்டும் வார்த்தைகளை கூறுங்கள்" எனக் கேட்டிருந்தார்.

Actor Sharukh Khan Advice to school students for Board Exam

Images are subject to © copyright to their respective owners.

அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்திருந்த ஷாருக் கான்,"உங்களால் முடிந்தவரை கடினமாகப் படிக்கவும். பதற்றம் அடைய வேண்டாம். பள்ளி மார்ச் பாஸ்ட்-ன் போது நான் ஒரு பலகையை எடுத்துச் செல்வேன்... ‘உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், மற்றதை விட்டுவிடுங்கள்’ என அதில் எழுதப்பட்டிருக்கும். அழுத்தமாக உணராதீர்கள். ஆல் தி பெஸ்ட்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | அஜித் - ஷாலினியின் 'அமர்க்களம்' .. வைரலாகும் Throwback BTS புகைப்படம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sharukh Khan Advice to school students for Board Exam

People looking for online information on Board Exam, School Students, Shah Rukh Khan will find this news story useful.