www.garudabazaar.com

நயன் & விக்கி திருமணத்தில் எடுத்த UNSEEN போட்டோவை வெளியிட்டு ரஜினியை வாழ்த்திய ஷாருக்கான் ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் வாழ்த்து கூறியுள்ளார்.

Shah Rukh Khan Wishes Super Star Rajinikanth

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த்.

1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.

அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

ரஜினி காந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

Shah Rukh Khan Wishes Super Star Rajinikanth

இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் சாந்தமான, ஸ்டைலான, தன்மையான நட்சத்திரங்களின் நட்சத்திரம்.. இப்பொழுதும் எப்பொழுதும்... லவ் யூ ரஜினிகாந்த் சார். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என ஷாருக்கான் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எடுத்த போட்டோவை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

Shah Rukh Khan Wishes Super Star Rajinikanth

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Wishes Super Star Rajinikanth

People looking for online information on Nayanthara, Rajinikanth, Shahrukh Khan, Vignesh shivan will find this news story useful.