www.garudabazaar.com
iTechUS

திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்.. ஹவுஸ்மேட்சை நெகிழ வச்ச வீடியோ.. இன்றைய பிக்பாஸில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Actor saravanan and Sujatha sivakumar enters into BB House

Also Read | எமோஷன் ஆன GP முத்து.. டக்குன்னு கமல் கேட்ட கேள்வி.. விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

Actor saravanan and Sujatha sivakumar enters into BB House

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

Actor saravanan and Sujatha sivakumar enters into BB House

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் சரவணன் மற்றும் நடிகை சுஜாதா சிவகுமார் ஆகியோர் வீட்டுக்குள் வந்துள்ளனர். சரவணனை வரவேற்கும் விதமாக பிக்பாஸ்,"வெல்கம் பேக் சரவணன்" என சொல்ல அதற்கு சரவணன் நன்றி தெரிவிக்கிறார்.

Actor saravanan and Sujatha sivakumar enters into BB House

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி தொடரில் நடித்திருப்பதாக சரவணன் மற்றும் சுஜாதா தெரிவிக்கின்றனர். அதேபோல இந்த தொடரில் நடித்துள்ளவர்களும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகைபுரிந்துள்ளனர். அப்போது, தொடரின் சில காட்சிகள் வீட்டுக்குள் திரையிடப்படுகின்றன. அதனை பார்த்து GP முத்து உள்ளிட்டோர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். இதனால் இன்றைய பிக்பாஸ் எபிசோட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

Also Read | “ஹவுஸ்மேட்ஸ் சொன்ன விமர்சனங்கள் எப்படி இருக்கு?”- பதில் சொன்ன விக்ரமனை பாராட்டிய கமல்.. Bigg Boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Actor saravanan and Sujatha sivakumar enters into BB House

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Saravanan, Sujatha Sivakumar, Vijay Television, Vijay tv will find this news story useful.