Viruman Logo Top
www.garudabazaar.com

ராக்கெட்ரி படம் லாபமா? மாதவன் வீட்டை இழந்துட்டாரா? வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த மாதவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி  2022 உலகம் முழுதும் வெளியானது. 

Madhavan Tweet about Rocketry The Nambi Effect Profit

Also Read | 'விருமன்' படத்தின் வெற்றி.. கார்த்தி & சூர்யாவுக்கு வைர Bracelet-ஐ பரிசளித்த வினியோகஸ்தர்!

இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியானது.

நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாராயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , எழுதி, இயக்கியும் இருந்தார்.இசையமைப்பாளர் சாம் சிஎஸ் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Madhavan Tweet about Rocketry The Nambi Effect Profit

கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என முடிவு செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன்,  உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட  பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியது.

Madhavan Tweet about Rocketry The Nambi Effect Profit

பெரும் பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்தனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினர்.

Madhavan Tweet about Rocketry The Nambi Effect Profit

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஓ யார். தயவு செய்து என் தியாகத்திற்கு அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரியில் ஈடுபட்டுள்ள அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் நாங்கள் அனைவரும் மிகவும் நல்ல மற்றும் பெருமையான லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் காதலித்து வாழ்கிறேன்".

நடிகர் மாதவன் ராக்கெட்ரி படத்துக்காக தனது வீட்டை விற்று விட்டதாக வதந்திகள் பரவின. இதை மறுதலிக்கும் விதமாக மாதவன் டிவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார்.

Also Read | பிரபல முன்னணி போட்டோகிராபருடன் இணைந்து நடிகை அதிதி ஷங்கர் போட்டோ ஷூட்.. செம போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan Tweet about Rocketry The Nambi Effect Profit

People looking for online information on Madhavan, Madhavan tweet, Rocketry the nambi effect movie will find this news story useful.