Viruman Logo Top
www.garudabazaar.com

DHOKHA: Round D Corner.. “நல்ல படம் ரிலீஸ் பண்ணா மக்கள் வருவாங்க!” - மாதவன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மனைவி ஒருவர் தன் கணவரை பழிவாங்குவதற்கு எடுக்கும் முயற்சிகளும் அதற்கான காரணங்களும் அதனால் விளைந்த விளைவுகளும் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "DHOKHA: Round D Corner" திரைப்படம்.

good films will work says madhavan DHOKHA: Round D Corner

Also Read | DHOKHA: Round D Corner: Glass-ஐ உடைத்து எண்ட்ரி.. மாதவன் & படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ்.!

கூகி குலாட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் மாதவன், அபர்ஷக்தி குரானா, தர்ஷன் குமார் மற்றும் அறிமுக நடிகை குஷாலி குமார் நடித்துள்ளனர். இதில் கணவன் மனைவியாக மாதவன் மற்றும் குஷாலி குமார் நடித்துள்ளனர். இவர்களுக்குள் பிரச்சனை என்ன? மாதவனை விட்டுச்செல்லும்  குஷாலி குமார் அபர்ஷக்தி குரானாவிடம் மாட்டிக் கொள்கிறாரா? அல்லது அபர்ஷக்தி குரானா, குஷாலி குமாரிடம்  மாட்டிக்கொள்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் இருவரிடமும் துப்பாக்கி மாறி மாறி கைமாறுவதை டீசரில் காண முடிகிறது.

மேலும் டீசரில், “என் கணவர் சொல்வதையே அனைவரும் உண்மை என நம்புகிறார்கள். நான் சொல்லும் உண்மையை யாருமே கவனிப்பது இல்லை” என ஒரு குரல் இடம் பெறுகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் அறிமுக விழாவில் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

good films will work says madhavan DHOKHA: Round D Corner

இதில் பேசிய ஆர். மாதவன், “நல்ல திரைப்படங்களை ரிலீஸ் செய்தால்  மக்கள் விரும்புவார்கள் மற்றும் இயல்பாகவே திரையரங்குகளில் சென்று பார்ப்பார்கள். தெளிவாக சொல்ல  வேண்டும் என்றால், இந்தி திரைப்படங்களை காட்டிலும் புஷ்பா, KGF, பாகுபலி,  RRR ஆகிய சில படங்களே சிறப்பாக வரவேற்கப்பட்டன, இவை கமர்ஷியல் பேட்டர்ன் படங்கள். எனினும் கொரோனோ காலத்தில் மக்களின் மனநிலை மாறியுள்ளது. ஏனென்றால் அவர்கள் உலகம் முழுவதுமான படங்களை அந்த கொரோனா காலக்கட்டத்தில் பார்த்துள்ளார்கள்.” என்று பேசினார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தென்னக மொழிகளில் ஆர்.மாதவன் இயக்கிய ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை ஆர்.மாதவன் எழுதி இயக்கியதுடன், நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

good films will work says madhavan DHOKHA: Round D Corner

இந்த படம் ஏகோபித்த திரைப்பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றதுடன், பிரபல IMDB இந்திய திரைப்பட தரவரிசைப் பட்டியல்களில் முதல் இடத்தினை அடைந்து அண்மையில் ட்ரெண்டிங்கில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | ராக்கெட்ரி படம் லாபமா? மாதவன் வீட்டை இழந்துட்டாரா? வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த மாதவன்!

தொடர்புடைய இணைப்புகள்

good films will work says madhavan DHOKHA: Round D Corner

People looking for online information on DHOKHA Round D Corner, Madhavan will find this news story useful.