www.garudabazaar.com

இது தளபதி.. 'LEO' லுக்கில் மாஸாக வரும் விஜய்.. வைரலாகும்  வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் LEO படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Leo Thalapathy Vijay Latest Video From Airport

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Samantha : கைகளில் காயத்துடன் சமந்தா பகிர்ந்த ஃபோட்டோ.. என்ன ஆச்சு? பரபரப்பில் ரசிகர்கள்.!

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

Leo Thalapathy Vijay Latest Video From Airport

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

Leo Thalapathy Vijay Latest Video From Airport

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Leo Thalapathy Vijay Latest Video From Airport

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் லியோ படத்தின் லுக்கில் வெண்ணிற உடையணிந்து நடிகர் விஜய் விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் படப்பிடிப்புக்கு சில தினங்களுக்கு முன் விஜய் புறப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோவாக இது அமைந்துள்ளது. நடிகை த்ரிஷாவும் விஜய்யுடன் ஒரிரு நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல இயக்குனருடன் விஜய் சேதுபதி இணையும் புதிய படம்.. டைட்டில் இது தானா? மாஸா இருக்கே..!

இது தளபதி.. 'LEO' லுக்கில் மாஸாக வரும் விஜய்.. வைரலாகும்  வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Leo Thalapathy Vijay Latest Video From Airport

People looking for online information on Leo, Thalapathy Vijay, Thalapathy Vijay Latest Video, Vijay will find this news story useful.