திடீரென்று நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட திருமண வீடியோ... 'ஷாக்'கான ரசிகர்கள்... என்னவா இருக்கும்..?
முகப்பு > சினிமா செய்திகள்மங்காத்தா, கோவா, சென்னை 28, வல்லவன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் பிரேம்ஜி. இசையமைப்பளார் கங்கை அமரனின் மகனான இவர் தனது அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் சேர்ந்து பல படங்களில் பங்காற்றியுள்ளார். இவரது வெள்ளந்தியான நடிப்புக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர்.
![நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட கல்யாண வீடியோ Actor premgi shares an marriage video in instagram நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட கல்யாண வீடியோ Actor premgi shares an marriage video in instagram](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-premgi-shares-an-marriage-video-in-instagram-photos-pictures-stills-1.jpg)
அவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வெகு தீவிரமாக பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் அவர் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது படத்தில் வந்த தாலி கட்டும் சீனை பகிர்ந்து சூசகமாக "கேம் ஓவர்" என்று தலைப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் " கல்யாணம் ஆகிடுச்சா பிரேம்ஜி" என்று கேட்டு வருகின்றனர். எதற்காக இந்த வீடியோவை பதிவிட்டார் என்ற காரணம் என்னும் தெரியவில்லை.
Tags : Premgi, Corona lockdown, Marriage, Venkat Prabu