ராயல் ரீயூனியன்: - மீண்டும் இணையும் ‘பாகுபலி’ ஸ்டார்ஸ் - விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 03, 2019 04:58 PM
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது.

உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவிற்கு அடையாளம் தேடித் தந்த ‘பாகுபலி’ திரைப்படங்களுக்கு மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்தனர்.
‘பாகுபலி’ படக்குழுவினருக்கு இது வெறும் திரைப்படம் மட்டுமல்லாது அவர்களது வாழ்வில் மறக்க முடியாத பயணமும் கூட. இந்நிலையில், பாகுபலி பிரபலங்கள் மீண்டும் ஒன்றிணையும் நிகழ்வு ஒன்று அரங்கேறவுள்ளது. பாகுபலி பிரபலங்கள் அனைவரும் மீண்டும் இணையவுள்ளனர், ஆனால் இம்முறை மற்றொரு படத்திற்காக அல்ல, இதே படத்திற்காக லண்டனில் நடைபெறவுள்ள எம்.எம்.கீரவாணியின் லைவ் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா சார்பில் லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் வரும் அக்.19ம் தேதி, எம்.எம்.கீரவாணியின் லைவ் ஷோ நடைபெறவுள்ளது. இதற்காக பாகுபலி திரைப்படத்தின் பிரபலங்கள் அனைவரும் மீண்டும் ஒரு ராயல் ரீயூனியனுக்கு தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக அறிவிப்பை பாகுபலி நாயகன் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.