www.garudabazaar.com

The Legend: “அவர் வெற்றியை பார்த்தவர்.. சினிமா ஆசைகாட்டி நடிக்க வைக்க முடியாது!” -  JD Jerry பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானதற்கு பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

We postponed The Legend acting idea JD Jerry Interview

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Naatu Naatu : கீரவாணியின் இத்தனை வருஷ இசைக்கு வெற்றி.. நாட்டு நாட்டு தமிழ்ப் பாடலாசிரியர் கார்க்கி.!

கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இசையமைக்கப்பெற்றன.

We postponed The Legend acting idea JD Jerry Interview

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை படத்தின் இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி பேட்டி அளித்துள்ளனர்.

இதில் லெஜண்ட் சரவணன் நடிப்பை பற்றி பேசும்போது, “அவர் முதல் பட நடிகர் தானே? நேற்றுவரை கடையில் வியாபாரம் தானே பண்ணிக்கொண்டு இருந்தார். அவரிடம் போய் சிவாஜி மாதிரி நடிப்பதாக ட்ரோல் பண்ணுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு உடல்மொழி உள்ளது. தம்பி ராமையா கதறி அழுவார். அப்படிதான் சரவணன் சார் ஷட்டிலாக நடிப்பதை தன்னுடைய உடல்மொழியாக கொண்டிருப்பார். இவருடைய கேரக்டர் டிசைனையே அதிக உணர்வுகளை வெளிக்கொண்டு வராத ஹிப் மேன் என்கிற ஒரு பட கேரக்டரை கொண்டு உருவாக்கினோம்.

We postponed The Legend acting idea JD Jerry Interview

Images are subject to © copyright to their respective owners.

முதல் படத்திலேயே இப்படி நடித்துள்ளாரே? அதை ஏன் பார்ப்பதில்லை யாரும்.  பலரும் இந்த படத்தை தற்போது ஓடிடியில் பார்த்துவிட்டு, இந்த படம் நல்லாருக்கே, ஏன் தியேட்டரில் விமர்சிக்கப்பட்டது என மதிப்பீடு தருகிறார்கள். அனைவரும் அப்ரிசியேட் பண்ணுகிறர்கள். லெஜண்ட் சார் தவிர்க்க முடியாத நடிகர், இன்னும் பல படங்களை அவர் பண்ணுவார். இந்த படம் தியேட்டர் அனுபவத்துக்கான திரைப்படமாகவே நாங்கள் உருவாக்கினோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், “லெஜண்ட் சரவணன் பெரிய நிறுவனத்தார். அவர்கள் பெரிய அளவில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி வெற்றியை பார்த்தவர்கள்., அவரை அப்படியெல்லாம் ஆசைகாட்டி நடிக்க வைத்துவிட முடியாது. அவர்களுக்கு தனி ஜட்ஜ்மெண்ட், தெளிவுண்டு. நடிக்க வேண்டும் என்பது லெஜண்ட் சாரின் முடிவு தான். நாங்கள் வேண்டாம் என சொல்லி அவரது யோசனையை தள்ளிப்போடத்தான் செய்தோம்.

We postponed The Legend acting idea JD Jerry Interview

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் அவர் நடிப்பதில் தீவிரமாகவே இருந்தார், பேஷனோடு இருந்தார் என்பதை புரிந்துகொண்டோம். எனினும் விளம்பரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடித்து பயிற்சி பெற்றிருந்தவர் பின்னர் நடிக்கும்போது முறையான கற்றலுடனும் அனைவரின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடன் நடித்தார்.  நாங்கள் சொன்ன எளிமையான கமர்ஷியல் கதை அவருக்கான கதையாக இருந்ததால் வொர்க் ஆனது” என்றனர்.

Also Read | Oscar 2023 : ஆஸ்கார் விருதை தட்டித் தூக்கிய அவதார் 2 .. எந்த பிரிவில்.? Avatar: The Way of Water

THE LEGEND: “அவர் வெற்றியை பார்த்தவர்.. சினிமா ஆசைகாட்டி நடிக்க வைக்க முடியாது!” -  JD JERRY பேட்டி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

We postponed The Legend acting idea JD Jerry Interview

People looking for online information on JD Jerry Interview, The legend, The Legend Sarvanan will find this news story useful.