www.garudabazaar.com

“இது தப்பா?”.. “அது உங்க அந்தரங்கம்.. யாருக்கும் Explain பண்ணாதீங்க!”.. Sruti Nakul பளார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோ நடிகர் நகுல். இவரது மனைவி ஸ்ருதி நகுல்ல், இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் அமர்வில் பல்வேறு பதில்களை அளித்துள்ளார். 

Sruti nakul answers to fans questions about sex life instagram

நடிகர் நகுல்

Sruti nakul answers to fans questions about sex life instagram

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் அனைவருக்கும் பரீச்சயமான நடிகர் நகுல், இதை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி என பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், நடிகர் நகுலை விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் அவ்வப்போது காண முடிந்தது.

பிக்பாஸ் ஜோடிகள்

Sruti nakul answers to fans questions about sex life instagram

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், முந்தைய சீசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் இடம் பெற்று தங்கள் ஆடல், பாடல், நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நகுலும் ஒரு நடுவராக வீற்றிருந்தார்.

நகுலின் மனைவி ஸ்ருதி

நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் அகிரா எனும் பெண் குழந்தை உள்ளார். முன்னதாக நகுலின் மனைவி ஸ்ருதி, தனது பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும், பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்த பதிவுகள் தொட்டே, இவரது கருத்துக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

Sruti nakul answers to fans questions about sex life instagram

இன்ஸ்டாகிராமில் கேள்வி - பதில்

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, தற்போது இன்ஸ்டாகிராமில் தம்மை பின்தொடரக்கூடிய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார். குறிப்பாக அந்தரங்க வாழ்க்கை மற்றும் அவை குறித்த விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஸ்ருதி, பெண்ணியம் தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார்.

இதில் என்ன தவறு?

அதன்படி ரசிகர் ஒருவர் ஸ்ருதியிடம் கேட்கும்போது, “நான் ஒரு 21 - 22 வயது மதிக்கத்தக்க பெண். நான் சில சமயம் சோர்வாக இருக்கும் பொழுது, தன்னின்பத்தை நாடுகிறேன். ஆனால் அது சிலருக்கு தவறாக தெரிகிறது. இதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

Sruti nakul answers to fans questions about sex life instagram

நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை!

இதற்கு பதில் அளித்திருக்கும் ஸ்ருதி, “உங்கள் செக்ஸ் வாழ்க்கை யாருடைய வியாபாரமும் இல்லை. அதுபற்றி நீங்கள் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை. உங்கள் அந்தரங்க நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது பற்றிய தகவலை அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. தம்மின்பம் ஆரோக்கியமானது.” என்று பதில் அளிதுள்ளார்.

Also Read: 3 லட்ச ரூபாய்... BiggBoss-க்குள் வந்த சரத்குமார் கொடுத்த சர்ப்ரைஸ்! பரபரப்பில் ஹவுஸ்மேட்ஸ்! தெறி ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

Sruti nakul answers to fans questions about sex life instagram

People looking for online information on Instagram, Nakul, Nakul wife, Sex life, Sruti Nakul will find this news story useful.