Reliable Software
www.garudabazaar.com

'பிக்பாஸ் 5வது சீசனில் குக் வித் கோமாளி போட்டியாளரா?'.. இளம் நடிகர் தொகுத்து வழங்குகிறாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல ரசிகர்களை தனக்கென உருவாக்கிக்கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.

CWC Kani, Nakul in BiggBoss Season 5 Kamalhaasan Silambarasan

இதுவரை இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிந்துவிட்டன. 4வது சீசனில் நடிகர் ஆரி டைட்டில் வின்னர் ஆக மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.  லாக்டவுன் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் பிக்பாஸ் நான்காவது சீசன் சற்றே தாமதமாக தொடங்கி முடிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனை பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது.

ஜூலை 18-ஆம் தேதிவாக்கில் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் குக் வித் கோமாளியில் பங்கேற்று கலக்கி வரும் கனி சீசன் 5வது பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அவ்வப்போது தன் குழந்தை மட்டும் வீடு தொடர்பான நிறைய குட்டி குட்டி விஷயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நடிகர் நகுலிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

CWC Kani, Nakul in BiggBoss Season 5 Kamalhaasan Silambarasan

இந்த முறை தேர்தல், பிரச்சாரம் என பலவற்றால் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு பதில் நடிகர் சிலம்பரசன் (எ) சிம்பு தொகுத்து வழங்குவாரா என்பது போல் பேசப்பட்டு வருகிறது. எனினும் இந்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எதுவாக இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் அதிகரித்து தான் வருகின்றனர். அவர்கள் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியினை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

ALSO READ: 'சந்தானத்தின் புதிய படம்!'.. சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

'பிக்பாஸ் 5வது சீசனில் குக் வித் கோமாளி போட்டியாளரா?'.. இளம் நடிகர் தொகுத்து வழங்குகிறாரா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CWC Kani, Nakul in BiggBoss Season 5 Kamalhaasan Silambarasan

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamilSeason5, KAMALHAASAN, Kamalhassan, Kani, SilambarasanTR, Str will find this news story useful.